வெள்ளி, நவம்பர் 16, 2012

ஷியாக்களின் முஹர்ரம் பத்தும், முஸ்லீம்களின் முஹர்ரம் பத்தும். ஓர் வரலாற்றுப் பார்வை



ஏகஇறைவனின் திருப்பெயரால்....

رَبَّنَا إِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوْمٍ لاَّ رَيْبَ فِيهِ إِنَّ اللّهَ لاَ يُخْلِفُ الْمِيعَادَ

எங்கள் இறைவா! எந்தச் சந்தேகமும் இல்லாத நாளில்1 எங்களை நீ ஒன்று திரட்டுபவன். (எனக் கூறுவார்கள்.) அல்லாஹ் வாக்கு மீற மாட்டான். திருக்குர்ஆன்.3:9




  முஹர்ரம் பத்தின் சிறப்புகள்.



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஃபிர்அவ்னை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது நல்ல ஒரு மனிதரை எவ்வாறு எளிதில் மறக்க முடியாதோ அவ்வாறே கொடுங்கோலன் ஒருவனையும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இந்த இருவரையும் அசைபோடுபவரால் மட்டுமே தன்னை இருவரில் யாரைப் போல் ஆக்கிக்கொண்டால் நல்லது என்ற முடிவுக்கு வர முடியும். அதனால் தான் திருமறை நெடுகிலும் இதைப் போன்ற கொடுங்கோலர்களின் வரலாற்றையும் இறுதியில் அவர்கள் அடைந்து கொண்ட இழிநிலையும் சொல்லிக் காட்டப்படுகிறது.

ஃபிர்அவன் எகிப்தை நீண்ட காலம் யாருடைய எதிர்ப்புமின்றி ஆட்சி செய்து வந்தான் ஆனால் ஆட்சி பெறுப்பையும், ஆளும் திறமையையும் கொடுத்த இறைவனுக்கு மாறு செய்தான்.

இன்னும் இதை தன்னுடைய தனித் திறமையால் அடைந்து கொண்டதைப் போல் எண்ணினான் அதனால் தன்னையே கடவுள்களுக்கெல்லாம் கடவுள் என்றும் பிரகடனப்படுத்திக் கொண்டான்.

மக்கள் ஒன்றிணைந்து ஆட்சிக்கெதிராக போராடி விடக் கூடதென்றெண்ணி மக்களை பலப் பிரிவுளாக பிரித்து அவர்களுக்கு மத்தியில் கலகத்தை வெடிக்கச் செய்து அவர்களை பலஹீனர்களாக ஆக்கினான்.

ஃபிர்அவ்ன் பூமியில் ஆணவம் கொண்டிருந்தான். அதில் உள்ளவர்களைப் பல பிரிவுகளாக்கி அவர்களில் ஒரு பிரிவினரைப் பலவீனர்களாக ஆக்கினான் . . . திருக்குர்ஆன் 28:4



கடந்த காலத்திலும், நிகழ் காலத்திலும் தன்னை எதிர்க்க தன்னுடைய ஆட்சியை அகற்ற துணிச்சல் கொண்டவர்கள் யாரும் இல்லாதது போல் எதிர் காலத்திலும் தன்னை எதிர்க்கவோ, தன்னுடைய ஆட்சியை அகற்றவோ யாரும் உருவாகி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.

தன்னை எதிர்க்கும் அளவுக்கு யாரும் உருவாகி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவன் இனி பிறக்கக் கூடிய ஆண் குழந்தைகளை கொன்று விடும்படி எகிப்து முழுவதும் உள்ள தனது பிரதிநிதிகளுக்கு கட்டளையிட்டான்.    

. . . அவர்களில் ஆண் மக்களைக் கொன்றான். பெண்(மக்)களை உயிருடன் விட்டான். அவன் குழப்பம் செய்பவனாக இருந்தான்.திருக்குர்ஆன் 2:49.

பலஹீனர்களாக ஆக்கப்பட்ட மக்களால் இவனுடைய சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியவில்லை. ஆனால் வலிமை மிக்க அல்லாஹ் அவனுடைய சர்வாதிகார ஆட்சியையும், அவனையும் ஒழித்துக் கட்டி அவனால் பலஹீனமாக்கப்பட்டவர்களை ஆட்சியில் அமர்த்துவதற்கு முடிவு பண்ணினான்.

அப்பூமியில் பலவீனர்களாகக் கருதப்பட்டோர் மீது அருள் புரியவும், அவர்களைத் தலைவர்களாக்கவும், அப்பூமிக்கு உரிமையாளர்களாக்கவும், அப்பூமியில் அவர்களுக்கு ஆதிக்கத்தை ஏற்படுத்தவும், ஃபிர்அவ்ன், ஹாமான் மற்றும் அவ்விருவரின் படையினரும் எதை அஞ்சினார்களோ அதை அவர்களுக்குக் காட்டவும் நாடினோம். திருக்குர்ஆன்.28:5 ,6

ஆண் குழந்தை பிறக்கிறது.
பிறப்பது ஆண் குழந்தையாக இருந்தால் கொலை செய்யப்பட வேண்டும் எனும் சட்டம் அமுலில் இருக்கும் போது ஒரு தாய்க்கு ஆண் குழந்தை பிறக்கிறது அதன் மீது அந்த தாய் அதிக ஆசை கொண்டு ஃபிர்அவ்னின் ஆட்களுக்கு தெரியாமல் மறைத்து வளர்க்கின்றார்கள். அல்லாஹ்வும் அக்குழந்தையை தனது தூதராக்க எண்ணுகின்றான். ஃபிர்அவனுடைய ஆட்கள் கண்டுப் பிடித்து விட்டால் கொலை செய்து விடுவார்கள் என்பதால் அக்குழந்தை அவனுடைய அரண்மனையில் வளர ஏற்பாடு செய்து விட்டால் கொலை செய்ய முடியாது என அல்லாஹ் முடிவு செய்கிறான். அக்குழந்தையின் தாயாருக்கு வஹீ அனுப்பி அக்குழந்தையை கடலில் இடும்படி அல்லாஹ் கூறுகிறான்.

''இவரை (இக்குழந்தையை) பெட்டிக்குள் வைத்து அதைக் கடலில் போடுவாயாக! கடல் அவரைக் கரையில் சேர்க்கும். எனக்கும், இவருக்கும் எதிரியானவன் இவரை எடுத்துக் கொள்வான்'' … திருக்குர்ஆன்.20:39.

அன்பைப் பொழிந்து மறைத்து மறைத்து வளர்த்தக் குழந்தையை கடலில் போட அத்தாய்க்கு தயக்கம் ஏற்படலாம் என்பதை அறிந்த அல்லாஹ் உன் குழந்தையை திருப்பி உன்னிடமே ஒப்படைப்பேன் அவரை என் தூதராக ஆக்குவேன் என்ற வாக்குறுதியையும் அத்தாய்க்கு அளிக்கிறான்.

... பயப்படாதே! கவலையும் படாதே! அவரை உன்னிடம் நாம் திரும்ப ஒப்படைத்து, அவரைத் தூதராக ஆக்குவோம்'' என்று மூஸாவின் தாயாருக்கு அறிவித்தோம். திருக்குர்ஆன்.28:7

அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க பேழை ஒன்றில் குழந்தையை வைத்து தனது மகளையும் அப்பேழை செல்லும் வழிகளில் பின் தொடரும்படி கூறுகிறார் அச்சகோதரியும் உடன் செல்கிறார்.

''நீ அவரைப் பின்தொடர்ந்து செல்!'' என்று மூஸாவின் சகோதரியிடம் (அவரது தாயார்) கூறினார். அவர்கள் அறியாத வகையில் தொலைவிலிருந்து அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். திருக்குர்ஆன்.28:11

ஃபிர்அவ்னும், அவனது மனைவியும் குளித்துக் கொண்டிருக்கையில் ஃபிர்அவ்னின் மனைவியின் பார்வையில் குழந்தையை சுமந்து வந்தப் பேழை தென்படுகிறது. அப்பேழையில் அழகான ஆண் குழந்தை இருப்பதைப் பார்த்து விட்ட ஃபிர்அவ்னின் மனைவி அக்குழந்தையை எடுத்துச் சென்று அரண்மனையில் வைத்து வளர்க்க ஆசைப் படுகிறார் அதற்கு அவனும் இணங்கி விடுகிறான்.

இக்குழந்தை வளர்ந்து தனக்கு எதிராக மாறும் என்ற எண்ணம் அப்பொழுது ஃபிர்அவ்னுடைய உள்ளத்தில் உதிக்கவில்லை. உள்ளங்களை புரட்டக் கூடியவன் அல்லாஹ் யாருடைய உள்ளத்தை எப்பொழுது எதன் பால் திருப்பி விட வேண்டும், எப்பொழுது அதை அதற்கு மேல் சிந்திக்க விடாமல் ஸ்தம்பிக்கச் செய்து விட வேண்டும் என்கின்ற முடிவு அவனிடமே இருப்பதால் குழந்தையை கொலை செய்யும் எண்ணம் ஃபிர்அவ்னுடைய மூளையில் உதிக்காதவாறு அக்குழந்தையின் மீது அவனுடைய மனைவியை ஆசை கொள்ளச் செய்து மனைவியுடைய ஆசைக்கு ஃபிர்அவ்னை இணங்கச் செய்து கொலை செய்யும் எண்ணத்தையே மறக்கடித்து விடுகிறான்.

ஆண் குழந்தைகளை கொலை செய்யச் சொல்லி ஊருக்கெல்லாம் உத்தரவு போட்டவனுடைய கையில் சிக்கிய ஆண் குழந்தையை கொல்லாமல் விடுவானா ?. அக்குழந்தை அவனிடமே வளர்ந்து அவனுக்கெதிராக போர்க்கொடி தூக்கும் வரை அவனுடைய கிரிமினல் மூளையை செயல்படாமல் ஸ்தம்பிக்கச்செய்து விட்டான் வலிமை மிக்க அல்லாஹ். 

''எனக்கும், உமக்கும் இவர் கண் குளிர்ச்சியாக இருக்கட்டும்! இவரைக் கொல்லாதீர்கள்! இவர் நமக்குப் பயன்படலாம். அல்லது இவரை மகனாக்கிக் கொள்ளலாம்'' என்று ஃபிர்அவ்னின் மனைவி கூறினார். அவர்கள் (விளைவை) அறியாதிருந்தனர். திருக்குர்ஆன்.28:9

குழந்தை அரண்மனைக்கு கொண்டு செல்லப் படுகிறது குழந்தைக்கு பால் கொடுக்க செவிலித் தாய்மார்கள் வரவழைக்கப் படுகின்றனர். ஆனாலும் அக்குழந்தையை எவரது மடியிலும் பால் அருந்த விடாமல் அல்லாஹ் தடுத்து விடுகிறான். பாலூட்டும் பெண்களை முன்பே அவருக்கு (மூஸாவுக்கு) விலக்கியிருந்தோம். .'' திருக்குர்ஆன்28:12

பேழையில் மிதந்து சென்று கொண்டிருந்த தனது பச்சிளம் சகோதரரை கண்கானித்து கூடவே பின் தொடர்ந்த சகோதரி இக்குழந்தைக்கு சிறப்பாக பாலூட்டி வளர்க்கும் ஒருவரை கொண்டு வரட்டுமா என ஃபிர்அவன் மனைவி ஆசியா அவர்களிடம் கேட்கிறார் ? அதற்கு ஆசியா அவர்கள் சம்மதிக்கிறார்கள், உடன் விரைந்து சென்று தனது தாயாரிடம் விபரம் கூறி அழைத்து வந்து விடுகிறார். அக்குழந்தை தனது தாயாரிடம் பால் அருந்தி ஃபிர்அவ்னின் மாளிகையில் வளரத் தொடங்குகிறது.

(பேழை கண்டெடுக்கப்பட்ட பின்) உம் சகோதரி நடந்து வந்து,…''உங்களுக்காக இக்குழந்தையைப் பொறுப்பேற்று வளர்க்கும் ஒரு குடும்பத்தினரைப் பற்றி நான் உங்களுக்குக் கூறட்டுமா? அவர்கள் இவரது நலனை நாடுபவர்கள்'' என்று அவள் கூறினாள்.  திருக்குர்ஆன்.20:12

அல்லாஹ் யார் ? அவன் எங்கே இருக்கிறான் ? என்றுக் கேட்பவர்கள் திருக்குர்ஆனைப் புரட்டினால் அல்லாஹ் யார் ? அவனுடைய வல்லமை எது? அவனுடைய வாக்குறுதி எப்படிப்பட்டது என்பதை தெரிந்து கொள்வர் !
உலகம் முடியும் காலம் வரை ஃபிர்அவ்னுடைய வரலாறு (கண்டெடுக்கப்பட்ட அவனுடைய உடல்) வல்ல அல்லாஹ்வின் வல்லமையை பறைசாற்றிக் கொண்டிருப்பதை நாம் எழுதித் தெரிய வேண்டியதில்லை உலகே கண்டு அதிசயிக்கிறது.

இன்னும் இந்த வரலாற்றில் வல்ல அல்லாஹ்வுடைய வாக்குறுதி எப்படிப் பட்டது என்பதையும் அறிவுடையோர் விளங்கிக் கொள்வர்.

அக்குழந்தையின் தாயாரிடம் குழந்தையை மீண்டும் உன்னிடமே ஒப்படைக்கப்படும் என்று அல்லாஹ் வாக்குறுதி அளித்தான் அதனால் குழந்தைக்கு பாலூட்ட எகிப்து முழுவதிலிமிருந்து தாய்மார்கள் பட்டாளமே புடை சூழ வந்தும் எவரது மடியிலிருந்தும் குழந்தை பாலருந்தாதவாறு தடுத்து விட்டான்..

இச்சம்பவத்தை அருகில் நின்றுப் பார்த்துக் கொண்டிருந்த சகோதரியின் உள்ளத்தில் தனது தாயை அழைத்து வரும்படி உதிப்பைப் போட்டு குழந்தையின் அசல் தாயை அங்கேக் கொண்டு வரச் செய்து பெற்ற தாயிடம் வாக்குறுகி அளித்தப் பிரகாரம் குழந்தையை சேர்த்து விடுகிறான் சர்வ சக்தியும், வல்லமையும் பொருந்திய வல்லோன் அல்லாஹ்.

இந்த உலகமே ஒன்று சேர்ந்து ஒருவருக்கு ஒரு நன்மையை நாடினாலும் அல்லாஹ் நாடினால் மட்டுமே நன்மை செய்ய முடியும்,

இந்த உலகமே ஒன்று சேர்ந்து ஒருவருக்கு ஒரு தீமையை நாடினால் அல்லாஹ் நாடினால் மட்டுமே தீமை செய்ய முடியும், எனும் சத்தியத் தூதர் (ஸல்) அவர்களின் நபிமொழிக்கு இந்த சம்பவம் மிகப் பெரிய சான்றுப் பகர்ந்து நிற்கிறது.

அழுகின்ற எந்த குழந்தைக்கும் பெற்றத் தாயின் மடி எது ? செவிலித் தாயின் மடி எது என்றுத் தெரியாது பசிக்கு பாலருந்தும் அவ்வளவு தான்.

ஆனால் இந்தக் குழந்தை மட்டும் பெற்றத் தாயின் மடியில் மட்டும் பாலருந்திய சம்பவமும், எதிப்து முழுவதிலுமுள்ள செவிலித் தாய்மார்களின் மடிகளை புறக்கனித்ததும் வல்லோன் அல்லாஹ்வின் நாட்டமே அன்றி வேறில்லை. சுப்ஹானல்லாஹ். அல்லாஹ் தூயவன்.  

மறுமை எப்பொழுது வரும் ? எப்பொழுது வரும் ? என்று கேட்பவர்களுக்கு திருக்குர்ஆனைப் புரட்டினால் மறுமை எப்பொழுது வரும் என்பது உறுதியாகத் தெரியும் !

வல்ல அல்லாஹ் மறுமையை கூட்டுவேன் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியேத் தீருவான்.

எங்கள் இறைவா! எந்தச் சந்தேகமும் இல்லாத நாளில்1 எங்களை நீ ஒன்று திரட்டுபவன். (எனக் கூறுவார்கள்.) அல்லாஹ் வாக்கு மீற மாட்டான். 3:9 .திருக்குர்ஆன்

இன்ஷா அல்லாஹ் தொடரும்....


இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்கும்) கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?'' என்று வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளிலும் நோன்பு நோற்போம்'' என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள். முஸ்லிம்: 2088


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்