செவ்வாய், ஜனவரி 27, 2015

ஆண்-பெண் இருபாலர் மீதும் தர்மம் செய்வதை கடமையாக்கியது இஸ்லாம்.

ஏக இறைவனின் திருப்பெயரால்....


ஆண்-பெண் இருபாலர் மீதும் தர்மம் செய்வதை கடமையாக்கியது இஸ்லாம்.

செல்வந்தர்களிடம் கூடுதல் பொருளாதாரம் இருக்கும் அவர்ககள் வாரி வழங்குவர்.
நடுத்தரமான நிலையில் உள்ளவர்களிடம் குறைவான பொருளாதாரம் இருக்கும் அவர்கள் வாரி வழங்காமல் பிடித்து நிருத்தி சிறிய அளவில் வழங்குவார்கள்.

அன்;றாடம் காய்ச்சிகள் தர்மம் செய்வதை முழுமையாக தடுத்துக் கொள்வார்கள்.
ஏன் என்றால் வரவுக்கும்> செலவுக்கும் சரியாக இருக்கும் அல்லது சிறிய அளவில் மிஞ்சினால் இதையா கொடுப்பது ?. என்று யோசித்துக் கொண்டு அதையும் கொடுக்காமல் முழுமையாக தடுத்துக் கொள்வார்கள்.

அவ்வாறு இல்லாமல் தாம் எதை உண்ணுகிறோமோ> எதை உடுத்துகிறோமோ அதில் சிறிய அளவில் மிஞ்சுவதை> மிஞ்ச வில்லை என்றாலும் சிறிதை மீதப்படுத்தி நமக்கு கீழ் நிலையில் உள்ளவர்களுக்கு கொடுத்து உதவும் மனநிலை வந்து விட வேண்டும். இதையா கொடுப்பது என்ற சிந்தனை வரக் கூடாது. அதற்காகத் தான் அதை அது ஆட்டின் கால் குளம்பாக இருநதாலும்  அற்பமாக கருதி கொடுக்காமல் தடுத்துக் கொள்ள வேண்டாம் என்கிறது இஸ்லாம்.

அந்த காலத்தில் சஹாபாக்கள் தர்மம் தொடர்பான வசனம் இறங்கியதும் கூலி வேலை செய்து அதிலும் தானும் உண்ண வேண்டும், தர்மமும் செய்ய வேண்டும் என்ற காரணத்தால் கடுமையாக உழைத்து அதில் கிடைப்பதில் சிறிதை அவர்களை விட வசதியில் கீழ்நிலையில் உள்ளவர்களுக்கு கொடுத்து உதவி மனநிறைவு அடைவார்கள்.

தர்மம் செய்யும்படி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கட்டளையிடுவார்கள். அப்போது நாங்கள் இரண்டு கையளவு (தானியம் தர்மமாகக்) கொண்டு வருவதற்குக் கூடக் கடுமையாக உழைப்போம். என்று அபூ மஸ்¥த் அல்அன்சாரி(ரலி) கூறுகிறார்கள். புகாரி.4669.

ஏன் இந்த அளவு தர்மம் செய்வதற்கு இஸ்லாம் வலியுருததுகிறது என்றால் மறுமையில் நரக நெருப்பிலிருந்து காப்பதற்கு உதவக் கூடிய உலக நற்செயல்களில் தர்மம் செய்வது முக்கிய நற்செயலாகும்.

அல்லாஹ் மறுமை நாளில் உங்களில் ஒவ்வொருவருடனும் (தனித்தனியாகப்) பேசாமலிருப்பதில்லை. அப்போது அல்லாஹ்வுக்கும் உங்களில் ஒருவருக்கும் இடையே மொழிபெயர்ப்பாளர் எவரும் இருக்கமாட்டார். பிறகு அவர் கூர்ந்து பார்ப்பார். தமக்கு முன்புறம் எதையும் அவர் காணமாட்டார். பிறகு தம(து முகத்து)க்கு எதிரே பார்ப்பார். அப்போது அவரை (நரக) நெருப்புதான் வரவேற்கும். எனவே, முடிந்தால் பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக  அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். புகாரி:6539

உணவு பொருட்களை< உடைகளை வீண் விரயம் செய்யாமல் அளவுடன் தேவைக்கு ஏற்றவாறு பயன்படுத்துவது பெண்கள் கையில் தான் உள்ளது.

அவ்வாறு மீதப்படுத்தி மிஞ்சுவதை தர்மம் செய்ய வேண்டும் என்று  பெண்களுக்காக சொல்லப்பட்ட நபிகளாரின் உபதேசமாகும்.

ஆண்கள் தங்களுடைய உழைப்பில் விரும்பியவாறு வாரி வழங்க வேண்டும் என்றும், பெண்கள் வீட்டில் மிஞ்சுவதை வழங்க வேண்டும்என்றும், ஆண்> பெண் இருபாலருக்கும் தர்மத்தை கடமையாக்கி நரகிலிருந்து பாதுகாப்பு வழங்கியது இஸ்லாம்.


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104


அழைப்புப் பணியில் அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்