செவ்வாய், மே 19, 2015

இங்கே (கருத்துக்) குருடராக இருப்பவர் மறுமையிலும் குருடராகவும், வழிகெட்டவராகவும் இருப்பார்



*** திருக்குர்ஆன் ***


தமிழாக்கம்: சகோ:பீ.ஜைனுல் ஆபிதீன் உலவி



அத்தியாயம் : 17 பனூ இஸ்ராயீல்

பனூ இஸ்ராயீல் – இஸ்ராயீலின் மக்கள்
மொத்த வசனங்கள் : 111
இஸ்ரவேலர்களுக்கு இறைவன் அளித்த வெற்றிகளும், அவர்கள் இறைவனுக்கு மாறுசெய்ததும், அவர்களுக்கு ஏற்பட்ட தோல்விகளும் இந்த அத்தியாயத்தில் 4 முதல் 8 வரை உள்ள வசனங்களில் கூறப்படுவதால் இஸ்ராயீலின் மக்கள் என்று இந்த அத்தியாயம் பெயர் பெற்றது.

அளவற்ற அருளாளனும்நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

71. ஒவ்வொரு சமுதாயத்தையும் அவரவரின் தலைவருடன் நாம் அழைக்கும் நாளில்1 தமது பதிவேடு வலது கையில் கொடுக்கப்படுவோர் தமது பதிவேட்டை வாசிப்பார்கள். அணுவளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
72. இங்கே (கருத்துக்) குருடராக இருப்பவர் மறுமையிலும் குருடராகவும், வழிகெட்டவராகவும் இருப்பார்.390
73. (முஹம்மதே!) நம் மீது நீர் இட்டுக்கட்ட வேண்டும் என்பதற்காக, நாம் உமக்கு அறிவித்ததை விட்டும் திசை திருப்ப முயன்றனர். (அப்படிச் செய்தால்) உம்மை உற்ற நண்பராக ஆக்கியிருப்பார்கள்.
74. (முஹம்மதே!) நாம் உம்மை நிலைப்படுத்தியிருக்கா விட்டால் அவர்களை நோக்கிச் சிறிதேனும் நீர் சாய்ந்திருப்பீர்!
75. அவ்வாறு நீர் செய்திருந்தால் வாழும்போது உமக்கு இரு மடங்கும், மரணிக்கும்போது இரு மடங்கும் வேதனையைச் சுவைக்கச் செய்திருப்போம். பின்னர் நம்மிடம் உமக்காக எந்த உதவியாளரையும் காண மாட்டீர்.156
76. (முஹம்மதே!) உம்மை இப்பூமியிலிருந்து கிளப்பி வெளியேற்றிட அவர்கள் முயன்றனர். அப்போது உமக்குப் பின்னர் அவர்கள் குறைவாகவே தங்கியிருப்பார்கள்.268
77. (முஹம்மதே!) உமக்கு முன் நாம் அனுப்பிய தூதர்கள் விஷயத்தில் (இதுவே நமது) வழிமுறையாகும். நமது வழிமுறையில் எந்த மாற்றத்தையும் காண மாட்டீர்!
78. சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவில் இருள்கள்303 சூழும் வரையில் தொழுகையையும் பஜ்ரு (தொழுகையில்) குர்ஆனையும் நிலைநாட்டுவீராக! பஜ்ரு (தொழுகையில்) குர்ஆன் சாட்சி கூறப்படுவதாக இருக்கிறது.
79. (முஹம்மதே!) உமக்கு உபரியாக இருக்கும் நிலையில் இரவில் இதன் மூலம் (குர்ஆன் மூலம்) தஹஜ்ஜுத் தொழுவீராக! புகழப்பட்ட இடத்தில் உமது இறைவன் உம்மை எழுப்பக் கூடும்.
80. என் இறைவா! நல்ல முறையில் என்னை நுழையச் செய்வாயாக! நல்ல முறையில் என்னை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து எனக்காக உதவும் ஆற்றலைத் தருவாயாக!'' எனக் கூறுவீராக!


வித்ரு தொழுகை எவ்வாறு தொழ வேண்டும் - தொழும் முறை - ?


https://www.youtube.com/watch?v=-5Nkjp2lSKc&index=22&list=PLuNRRDmEHHQFOIXW4m7DS4xH5jshmHH8K