சனி, ஜூன் 27, 2020








*** திருக்குர்ஆன் ***


தமிழாக்கம்: சகோ:பீ.ஜைனுல் ஆபிதீன் உலவி



அத்தியாயம் : 17 பனூ இஸ்ராயீல்

பனூ இஸ்ராயீல் – இஸ்ராயீலின் மக்கள்
மொத்த வசனங்கள் : 111
இஸ்ரவேலர்களுக்கு இறைவன் அளித்த வெற்றிகளும், அவர்கள் இறைவனுக்கு மாறுசெய்ததும், அவர்களுக்கு ஏற்பட்ட தோல்விகளும் இந்த அத்தியாயத்தில் 4 முதல் 8 வரை உள்ள வசனங்களில் கூறப்படுவதால் இஸ்ராயீலின் மக்கள் என்று இந்த அத்தியாயம் பெயர் பெற்றது.

அளவற்ற அருளாளனும்நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

71. ஒவ்வொரு சமுதாயத்தையும் அவரவரின் தலைவருடன் நாம் அழைக்கும் நாளில்1 தமது பதிவேடு வலது கையில் கொடுக்கப்படுவோர் தமது பதிவேட்டை வாசிப்பார்கள். அணுவளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
72. இங்கே (கருத்துக்) குருடராக இருப்பவர் மறுமையிலும் குருடராகவும், வழிகெட்டவராகவும் இருப்பார்.390
73. (முஹம்மதே!) நம் மீது நீர் இட்டுக்கட்ட வேண்டும் என்பதற்காக, நாம் உமக்கு அறிவித்ததை விட்டும் திசை திருசப்பூமியிலிருந்து கிளப்பி வெளியேற்றிட அவர்கள் முயன்றனர். அப்போது உமக்குப் பி










ஞாயிறு, அக்டோபர் 29, 2017

முஸ்லிம் பெற்றோரே உஷார்...!

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ


காதல் என்ற பெயரில் கறுவருக்கப்படும் முஸ்லிம் பெண்கள். 
(விழிப்புணர்வு கட்டுரை)

அப்பாவி முஸ்லிம் பெண்கள் சங்பரிவார் கும்பலால் அல்லது சங்பரிவார் தூண்டுதலால் காதலித்து திருமனத்திற்கு முன் அல்லது திருமணத்திற்குப் பின் கொலை செய்யப்படுகின்றனர்.
இது போன்ற சங்பரிவாரின் திட்டங்கள் நிறைவேறுவதை காவல்துறை இரும்புக்கரம் கொண்டு தடுத்து நிருத்த வேண்டும்.
காதலுக்கு கண் இல்லை, காதலுக்கு ஜாதி இல்லை, மதம் இல்லை என்று சினிமாக்களிலும் நாடகங்களிலும் காட்சிகள் அமைத்து, தரம் தாழ்ந்த பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதி அப்பாவி முஸ்லிம் பெண்களை முஸ்லிமல்லாதவர்ளை காதல் செய்யத் தூண்டுகிறது பாஷிச எண்ணம் கொண்ட சினிமாத் துறை மற்றும் ஊடகத்துறை.
இவர்களுடைய சதித் திட்டத்தை அறியாத அப்பாவிப் பெண்கள் விட்டில் பூச்சிகளாய் காமுகர்களின் சதிவலையில் வீழ்ந்து மடிவதுடன் குடும்ப கௌரவத்தையும் காற்றில் பறக்க விடுகின்றனர்.
கண் இமைக்கும் நேரத்தில் சமூக வலைதளங்களில் இதன் தகவல்கள் அசுர வேகத்தில் பரவுவதால் அந்த குடும்பத்தில் உள்ள அடுத்தடுத்த பிள்ளைகள் கரை ஏறுவது கடினமாகி விடுகிறது.
பெண்பிள்ளை கல்வி கற்க வேண்டும், பட்டதாரியாக வேண்டும் என்று ஆசைப்படும் பெற்றோர் பர்தா சட்டத்தைப் பற்றி கவலைப் படாமல் கோஎஜூகேஷன் கல்லூரிகள் மற்றும் வெளிஊர் கல்லூரிகளில் படிக்க அனுமதிக்கின்றனர்.
விடுதியில் தங்கி வெளிஊர் கல்லூரிகளில் படிக்கும் முஸ்லிம் பெண்களை சங்பரிவார் சதிவலையில் சிக்க வைப்பதற்கு ஆங்காங்கே சில பெண் ஏஜன்டுகளை சங்பரிவாரம் ஏற்படுத்தி வைத்திருக்கிறது.
அதன் அடிப்படையில் வெளிஊர்களிலிருந்து வந்து விடுதிகளில் தங்கிப்படிக்கும் முஸ்லிம் பெண்களை அந்த ஏஜன்டுகள் இலகுவாக காதல் என்றப் பெயரில் வீழ்த்தி சங்பரிவார காமுகர்களிடம் ஒப்படைக்கின்றனர் இது ஒரு வகை.
இதை விட இலகுவாக கோஎஜூகேஷன் கல்லூரிகளில் நேரடியாகவே இந்த காமுகர்கள் நாளுக்கு ஒரு உடையிலும், நேரத்திற்கு ஒரு ஸ்டைலிலும் வந்து காதல்(சதி)வலையில் வீழ்த்தி விடுகின்றனர்.
இதற்கு துணை நிற்பது வெளிநாட்டில் வேலை செய்யும் தந்தை மார்கள் கல்லூரியில் படிக்கும் தங்கள் அன்பு மகளுக்கு வாங்கிக் கொடுக்கும் அதி நவீன கூடுதல் தொழில்நுட்பம் உள்ள விலை உயர்ந்த செல்ஃபோன்கள்.
ருக்ஸானாவை கொலை செய்த பிரசாந்தை கண்டுப்பிடித்தது ருக்ஷானாவின் செல்போன் மூலமாகத்தான் என்பது இதற்கு சான்று.
காமுகர்களின் சதி வலையில் போய் தாமாக விழுவதற்கு செல்ஃபோன் மூலதனமாக இருப்பதை பெற்றோர் உணர்ந்து திருமணம் செய்து வைக்கும் வரை வயதுக்கு வந்த பெண்பிள்ளைகளுக்கு செல்போன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
பெண்பிள்ளைகளை தங்கள் கண் பார்வைக்கு அருகே வைத்து நாணத்தையும், வெட்கத்தையும் ஊட்டி வளர்க்கப்பட வேண்டும்.
இஸ்லாமிய ஒழுக்க நெறிமுறைகளை கற்றுக்கொள்ள இஸ்லாமிய கல்லூரிகளில் மார்க்கக் கல்வியை பயிற்றுவிக்கப்பட வேண்டும். பாதுகாப்பற்ற, பர்தா சட்டம் பகிரங்கமாக மீறப்படுகின்ற உலக கல்வியை தவிர்க்க வேண்டும்.
பருவ வயதை அடைந்ததும் தாமதிக்காமல் திருமணம் செய்து வைக்கப்பட வேண்டும்.
இஸ்லாம் கூறும் இந்த நெறிமுறைகளை பெற்றோர் மீறுவதால் ஏற்படும் விளைவுகள் தான் ருக்ஷானா, ஷாக்கிரா கொலைகள்.
அல்லாஹ் தன் திருமறையிலே கூறுகிறான்.

👇

இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் உங்களை எவ்வளவு கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப்பெண் சிறந்தவள். 👉இணைகற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன்.👈 அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கத்திற்கும்இ மன்னிப்பிற்கும் அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அல்குர்ஆன்.2:221

பெண் பிள்ளைகளுக்கு மார்க்கக் கல்வியை பயிற்றுவித்தால் மேற்காணும் குர்ஆன் வசனம் கூறும் உபதேசத்தை ஏற்றிருப்பார்கள் இதுபோன்ற ஏகஇறைவனுக்கு இணைகற்பிக்கும் வழிகேடர்களை நம்பி வாழ்க்கையை தொலைக்க மாட்டார்கள், உயிரை இழக்க மாட்டார்கள்.
இறைவனுக்கு இணை கற்பிக்கும் ஆண், பெண் இருவருமே ஓறிறை வணக்கத்தை கொள்கையாகக் கொண்ட முஸ்லிம்களை மணமுடிக்க தகுதியற்றவர்கள் என்ற மேற்காணும் குர்ஆன் வசனத்தை முஸ்லிமான ஆண் திருமணம் செய்வதாக முஸ்லிமல்லாத பெண்ணிடம் வாக்குறுதி அளித்து ஏமாற்ற மாட்டான்.
முஸ்லிமான பெண் திருமணம் செய்வதாக வாக்களிக்கும் முஸ்லிமல்லாதவனின் வாக்கை ஏற்று ஏமாற மாட்டாள்.
இதனால் தான் இருவரில் ஒருவர் முஸ்லிமல்லாத நிலையில் இருந்தாலும் ஜமாத் திருமணம் செய்து வைப்பதில்லை, அவ்வாறு திருமணம் செய்து வைக்க மறுக்கப்படுபவர்கள் ஓடிப்போய் திருமணம் செய்கின்றனர்.
பெண் வீட்டை விட்டு ஓடி வருவதால் கேட்க நாதி இல்லை என்ற காரணத்தால் சிறு பிரச்சனை ஏற்பட்டாலும் கொலை செய்து விடுகின்றான். வீட்டை விட்டு ஓடி வராதவளை கர்ண கொடூரமாக கொலை செய்து விடுகிறான்.
எனக்கு கிடைக்காதவள் வேறு எவனுக்கும் கிகை;கக் கூடாது என்ற எண்ணத்தில் தான் ருக்ஷானாவை கொலை செய்து முகத்தை சிதைத்தேன் என்று பிரசாந்த் கூறியது இதற்கு சான்று.
இவனுக்கே கிடைத்தாலும் கொலை தான் செய்வான் இப்படித்தான் பல முஸ்லிம் பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் பல்லாவரத்தில் ஷாக்கிரா என்ற பெண் கார்த்திக் என்றவனை காதலித்து வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி பதிவு திருணம் செய்த 40வது நாளில் அடித்து தூக்கில் தொங்க விட்டு விட்டான்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஒரே வாரத்தில் நடந்த இந்த இரண்டு கொலைகளிலும் தொடர்புடைய பெண்கள் உலக கல்விப் பயின்ற பட்டதாரிகள்.
இவர்களுக்கு மார்க்கக் கல்வியை ஊட்டாத பெற்றோர்கள் தான் இதற்கு காரணம்.
இதற்கு இவர்கள் அல்லாஹ்விடம் மறுமையில் பதில் சொல்லியாக வேண்டிய நிலை வரும்.

ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களே

👇

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளாராவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். 👉ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிப்படுவான். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். 👈 பணியாள், தன் எஜமானின் உடைமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான். 2409. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

கிளியை வளர்த்து பூனையிடமும், குரங்கிடமும் சிக்க வைக்க வழி வகுக்கும், பெற்றோரே சிந்தியுங்கள்.

குரங்கு கையில் சிக்கிய பூமாலை பிய்த்து சின்னாப்பின்னப் படுத்தப்படுவதை விட பிரசாந்த் என்ற மனித குரங்கிடம் சிக்கி நிர்வான நிலையில் முகம் அடையாளம் தெரியாமல் சிதைக்கப்பட்ட ருக்ஷானாவின் நிலையை ஒவ்வொரு பெற்றோரும் எண்ணி தங்களுடைய பிள்ளைகள் விஷயத்தில் எந்த கல்வி தேவை ? எப்பொழுது செல்போன் தேவை ? என்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.


இது போன்று வெளியில் வருவது ஒன்று இரண்டு சம்பவங்கள் தான், வெளியில் தெரியாமல் மறைக்கப்படுவது ஏராளம்.



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104


அழைப்புப் பணியில் அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

செவ்வாய், மே 19, 2015

இங்கே (கருத்துக்) குருடராக இருப்பவர் மறுமையிலும் குருடராகவும், வழிகெட்டவராகவும் இருப்பார்



*** திருக்குர்ஆன் ***


தமிழாக்கம்: சகோ:பீ.ஜைனுல் ஆபிதீன் உலவி



அத்தியாயம் : 17 பனூ இஸ்ராயீல்

பனூ இஸ்ராயீல் – இஸ்ராயீலின் மக்கள்
மொத்த வசனங்கள் : 111
இஸ்ரவேலர்களுக்கு இறைவன் அளித்த வெற்றிகளும், அவர்கள் இறைவனுக்கு மாறுசெய்ததும், அவர்களுக்கு ஏற்பட்ட தோல்விகளும் இந்த அத்தியாயத்தில் 4 முதல் 8 வரை உள்ள வசனங்களில் கூறப்படுவதால் இஸ்ராயீலின் மக்கள் என்று இந்த அத்தியாயம் பெயர் பெற்றது.

அளவற்ற அருளாளனும்நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

71. ஒவ்வொரு சமுதாயத்தையும் அவரவரின் தலைவருடன் நாம் அழைக்கும் நாளில்1 தமது பதிவேடு வலது கையில் கொடுக்கப்படுவோர் தமது பதிவேட்டை வாசிப்பார்கள். அணுவளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
72. இங்கே (கருத்துக்) குருடராக இருப்பவர் மறுமையிலும் குருடராகவும், வழிகெட்டவராகவும் இருப்பார்.390
73. (முஹம்மதே!) நம் மீது நீர் இட்டுக்கட்ட வேண்டும் என்பதற்காக, நாம் உமக்கு அறிவித்ததை விட்டும் திசை திருப்ப முயன்றனர். (அப்படிச் செய்தால்) உம்மை உற்ற நண்பராக ஆக்கியிருப்பார்கள்.
74. (முஹம்மதே!) நாம் உம்மை நிலைப்படுத்தியிருக்கா விட்டால் அவர்களை நோக்கிச் சிறிதேனும் நீர் சாய்ந்திருப்பீர்!
75. அவ்வாறு நீர் செய்திருந்தால் வாழும்போது உமக்கு இரு மடங்கும், மரணிக்கும்போது இரு மடங்கும் வேதனையைச் சுவைக்கச் செய்திருப்போம். பின்னர் நம்மிடம் உமக்காக எந்த உதவியாளரையும் காண மாட்டீர்.156
76. (முஹம்மதே!) உம்மை இப்பூமியிலிருந்து கிளப்பி வெளியேற்றிட அவர்கள் முயன்றனர். அப்போது உமக்குப் பின்னர் அவர்கள் குறைவாகவே தங்கியிருப்பார்கள்.268
77. (முஹம்மதே!) உமக்கு முன் நாம் அனுப்பிய தூதர்கள் விஷயத்தில் (இதுவே நமது) வழிமுறையாகும். நமது வழிமுறையில் எந்த மாற்றத்தையும் காண மாட்டீர்!
78. சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவில் இருள்கள்303 சூழும் வரையில் தொழுகையையும் பஜ்ரு (தொழுகையில்) குர்ஆனையும் நிலைநாட்டுவீராக! பஜ்ரு (தொழுகையில்) குர்ஆன் சாட்சி கூறப்படுவதாக இருக்கிறது.
79. (முஹம்மதே!) உமக்கு உபரியாக இருக்கும் நிலையில் இரவில் இதன் மூலம் (குர்ஆன் மூலம்) தஹஜ்ஜுத் தொழுவீராக! புகழப்பட்ட இடத்தில் உமது இறைவன் உம்மை எழுப்பக் கூடும்.
80. என் இறைவா! நல்ல முறையில் என்னை நுழையச் செய்வாயாக! நல்ல முறையில் என்னை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து எனக்காக உதவும் ஆற்றலைத் தருவாயாக!'' எனக் கூறுவீராக!


வித்ரு தொழுகை எவ்வாறு தொழ வேண்டும் - தொழும் முறை - ?


https://www.youtube.com/watch?v=-5Nkjp2lSKc&index=22&list=PLuNRRDmEHHQFOIXW4m7DS4xH5jshmHH8K